நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தெலுங்கில் அவர் வில்லனாக நடித்து வெளிவந்த 'உப்பெனா' படம் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. அதற்கு முன்பு வெளியான 'மாஸ்டர்' படத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அங்கு அறிமுகமானவர் விஜய் சேதுபதி.
'உப்பெனா' படத்திற்குப் பிறகு அவரைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அவற்றை ஒத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். “தற்போது தெலுங்கு கற்று வருகிறேன். அதில் நன்றாக பேச ஆரம்பித்ததும், தெலுங்கில் அதிகம் நடிக்கிறேன்,” என அவரைத் தேடி வரும் தெலுங்குத் திரையுலகினரிடம் தெரிவிக்கிறாராம்.
விஜய் சேதுபதி தற்போது 'மும்பை சகா' என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் சீக்கிரமே 'பான் இந்தியா' நடிகராக மாறிவிடுவார் போலிருக்கிறது.