ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
கனடா நாட்டை சேர்ந்த நீலப்பட நடிகையான சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு, மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அதன்பிறகு வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அந்த படம் டிராப் ஆனது.
இந்த நிலையில் சன்னி லியோன் இன்னொரு தமிழ் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயோ மீடியா எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் டி.வி.சக்தி, ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கிறார்கள். சிந்தனை செய் படத்தை இயக்கிய யுவன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழக ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் ஹாரர் காமெடியை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ஒரு புதுமையான ஹாரர் காமெடி திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக இப்படம் வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடி கதையினை சொல்லும் படமாக இருக்கும்.
இப்படத்தில் மிகவும் முக்கியமான, முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதை விடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின், அந்த கதாபாத்திரத்தை செய்யும் போது அக்கதாபாத்திரத்திற்கு ஒரு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். ரசிகர்கள் கண்டிப்பாக அவரை திரையில் கொண்டாடுவார்கள்.
மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத்முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னையிலும், மும்பையிலும் படமாக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். என்றார்.