அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவர் சரவண சக்தி. தற்போது பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் மீது பிரபல தயாரிப்பாளரும், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் கதை திருட்டு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா ஊரடங்கின்போது என்னைத் தொடர்பு கொண்ட நடிகர் மற்றும் இயக்குநருமான சரவண சக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாகச் சிரமப்படுவதாகவும், பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நானொரு கதை சொல்கிறேன் அதற்குத் திரைக்கதை அமைத்துத் தாருங்கள் என்று கூறி படத்திற்கு எங்க குலசாமி என்று தலைப்பும் நானே கொடுத்தேன். அதற்கு 50 ஆயிரம் சம்பளமும் கொடுத்தேன்.
ஆனால் என்னிடம் ஒப்புக்கொண்டபடி திரைக்கதை அமைத்து தரவில்லை. அதன் பின்னர் நான் கூறிய ஒரு வரி கதையை எனக்கு தெரிந்த வேறு ஒரு குழுவிடம் கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி, அதனை வைத்து தற்போது படம் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. நான் கொடுத்த எங்க குல சாமி என்ற டைட்டிலையும் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக கேள்வி கேட்டதால் நான் இல்லாத நேரத்தில் தனது நண்பர்களுடன் குடிபோதையில் எனது அலுவலகத்திற்கு வந்து கலாட்டா செய்தார். அலுவலக ஊழியர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வருவதற்கு ஓடிவிட்டார்கள். காவல் நிலைய விசாரணைக்கு இதுவரை அவர் ஆஜராகவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.