ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
நடிகர் பிரித்விராஜை தொடர்ந்து, அடுத்ததாக தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் மோகன்லால். ஆனால் அவரைப்போல கமர்ஷியல் ஆக்சன் கதையில் இறங்காமல் 'பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' என்கிற, குழந்தைகள் ரசிக்கும் விதமான வரலாற்று படத்தை தான் இயக்குகிறார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்ற நிலையில், இதன் படப்படிப்பையும் தாமதமின்றி துவங்கி விட்டார் மோகன்லால். அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்தப்படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகிறது. ஆனால் முதலில் 2டியில் எடுத்து பின்னர் 3டிக்கு மாற்றாமல், 3டி கேமரா மூலமாகவே காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு நாற்பது வருடங்களுக்கு முன் வெளியான, 3டியில் உருவான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய, ஜிஜோ பொன்னூஸ் என்பவர் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
நானூறு வருடங்களுக்கு முன் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது, சேர்த்துவைத்த சொத்துக்களை, பாரோஸ் என்கிற பாதுகவாலன் காவல் காத்து வருவதாக ஒரு புனைவு கதை ஒன்று கேரளாவில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த கதையைத்தான் படமாக இயக்கி, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார் மோகன்லால்.