காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சில தினங்களுக்கு முன் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‛‛எனக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்டும் கனவு இருந்தது. நானும் கஷ்டப்பட்டு கட்டினேன். அங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்னு பார்த்தால் ஒரு பிரச்னை. நம்ம என்ன கோழையா, எப்படி அமைதியா இருக்க முடியும். இப்போது இந்த பிரச்னை பெரிதாகிவிட்டது, அதான் உங்களிடம் பேசுகிறேன்'' என கூறியிருந்தார்.
இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் என்ன பிரச்னை என்பது போன்று ஒரு தோற்றம் உருவானது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் மதில். இதில் இவருடன் மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலே கே.எஸ்.ரவிக்குமார் வீடியோவில் கூறிய விஷயம் தான் இந்தபடத்தின் கதை. இந்தப்படம் இப்போது நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்., 14ல் வெளியாகிறது. இதற்கான புரொமோஷனை தான் இப்படி வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.