ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சமூக வலைத்தளங்களில் அதிகமான கவர்ச்சிப் படங்களைப் பகிர்வது யார் என ஒரு போட்டியே வைக்கலாம். அந்த அளவிற்கு சில நடிகைகள் கவர்ச்சிப் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் 'மாஸ்டர்' பட கதாநாயகி மாளவிகா மோகனன். 'மாஸ்டர்' படம் வெளிவருவதற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சிப்படங்களைப் பதிவிட்டு வந்தார். படம் வெளிவந்த பின் அவற்றிற்கு சிறிது ஓய்வு கொடுத்தார்.
இப்போது மீண்டும் கவர்ச்சிப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் மிகவும் 'எரோட்டிக்' ஆன புகைப்படங்களாக இருந்தது. இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கிட்டத்தட்ட 5 லட்சம் லைக்குகள் வரை கிடைத்துள்ளது.
பெரிய நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள் பொதுவாக இப்படியான படங்களை அதிகம் வெளியிட மாட்டார்கள். கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பவர்கள் தான். அவர்கள் எல்லாம் இப்படி படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், மாளவிகா மோகனன் இப்படி வெளியிடுவதுதான் ஆச்சரியமான ஒன்று.