ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா, லால், யோகிபாபு நடித்துள்ள கர்ணன் படம் ஏப்.,9ல் திரைக்கு வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி பாடலால் சர்ச்சை எழுந்த நிலையில் அதில் ஒரு மாற்றம் செய்துள்ளதாக மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை :
கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.
பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்... காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.