'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சென்னை : பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி பி.சுசீலா(85). 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பாடி வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரின் சாதனை எண்ணிலடங்காதது. பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வென்றிருப்பவர் 5 முறை தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு மற்றொரு மகுடமாய் தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடக துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.
![]() |