'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்கள் என்பது ஊரறறிந்த செய்தி. ஆனால், அவர்கள இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பலர் அறியாத செய்தி.
இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை அடிக்கடி பொறாமைப்பட வைத்து வந்தார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனப் பலர் கேட்பது வழக்கம்.
இன்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் மூலம் அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில், “விரலோடு உயிர் கூட கோர்த்து” என ஒரு வரியைப் பதிவிட்டு ஹாட்டின் ஸ்மைலிகளையும் சேர்த்துள்ளார் விக்னேஷ் சிவன் அதற்கான புகைப்படத்தில் நயன்தாராவின் கைவிரல்களில் மோதிரத்துடன் இருக்கும் படத்தைத்தான் பதிவிட்டுள்ளார்.
ஒன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம், அல்லது விரைவில் நடக்கலாம். எப்படியோ விரைவில் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.