ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த வரும் படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, டேனியேல் பாலாஜி உள்பட பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் வெளியாகியுள்ள நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு அரசியல் மாநாடு செட்டில் படமாக்கப்போகிறோம். அந்த காட்சியோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு.
இந்நிலையில், தற்போது மாநாடு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க ஒரு பிரமாண்ட செட் போடும் பணி துவங்கி உள்ளது. அந்த செட் பணிகள் நடக்கும் இடத்தின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.