3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் |
சினிமாவில் அடியாள் வேடத்தில் தலைகாட்டி, பின்னர் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறியவர் நடிகர் மன்சூர் அலிகான். இப்போதும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மன்சூர் அலிகான், கடந்த பார்லிமென்ட் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளாராக திண்டுக்கல்லில் போட்டியிட்டு ஐம்பதாயிரத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றார்.
ஆனால் இந்தமுறை சட்டசபை தேர்தலில் அவருக்கு நாம் தமிழர் கட்சியில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், திடீரென, வரும் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என கூறி உள்ளார் மன்சூர் அலிகான்..
“தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் தான் புதிய கட்சி ஒன்றை துவங்கி தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக, வேட்பு மனு தாக்கல் செய்தேன். தற்போது பிரச்சாரமும் செய்து வருகிறேன். ஆனால் நான் பிரச்சாரத்துக்கு செல்லுமிடம் எல்லாம், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள், எந்த கட்சி ஓட்டுக்களை பிரிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என்பது போலவே பத்துக்கு எட்டு பேர் என்னிடம் கேட்கிறார்கள். இது என் மனதுக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது. அதனால் இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டேன்” என விரக்தியுடன் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.