ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக் எனும் தீப்பெட்டி கணேசன். சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், குழந்தைக்கு பால் வாங்க கூட பணமில்லை என கூறி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். அதையடுத்து சிலர் அவருக்கு உதவினர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன் இன்று(மார்ச் 22) காலை மறைந்தார். இதுகுறித்து அவரின் மனைவி கூறுகையில், ‛‛ குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த மார்ச் 9ல் எனது கணவரை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். தொடர்ந்து உடல்நிலை நன்றாக தேறி வந்தது. இன்று வீட்டிற்கு செல்லலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இதற்காக காலையில் தயாராக இருந்தோம். டீ கேட்டார், வாங்கி வந்து கொடுத்தேன். குடித்துவிட்டு நன்றாக தான் இருந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என கண்ணீர் மல்க கூறினார்.
மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
தீப்பெட்டி கணேசனின் மறைவுக்கு இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன், தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறைய இதய அஞ்சலி கணேசா..” எனப் பதிவிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் உதவி
இந்த நிலையில் தீப்பெட்டி கணேசனின் மரணத்தை தொடர்ந்து, இவரது குழந்தைகளின் படிப்பு செலவு, எதிர்காலம் ஆகியவற்றை தான் கவனித்து கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் குறிப்பிடுகையில், “இவ்வருடம் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற உதவிகளை அவரது குழந்திகளுக்கு செய்வேன் என கூறியுள்ளார்.