2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிடைக்கிற பாலில் எல்லாம் சிக்சர் அடிக்கும் திறமைசாலி விஜய் சேதுபதி. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் அடம் பிடிக்காமல், வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி, கௌரவத் தோற்றம் என்றாலும் சரி என கிடைக்கிற வாய்ப்பில் தன் திறமையைக் காட்டி அப்ளாஸ் அள்ளி விடுவார்.
வெள்ளித்திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் போதிலும், கமல் பாணியில் சில காலம் சின்னத்திரையிலும் தொகுப்பாளராக இருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை அவர் குக் விக் கோமாளி மாதிரியான சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறாராம். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதத்திற்கு அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வில்லத்தனத்திலேயே காமெடி கலந்து மிரட்டுபவர் என்பதால், நிச்சயம் இந்த நிகழ்ச்சியும் களை கட்டும் என எதிர்பார்க்கலாம்.