போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இயக்கத்தில் அஜித் நாயகனாக நடித்து வரும் படம் 'வலிமை'. இப்படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகரான கார்த்திகேயா நடிக்கிறார். தெலுங்கில் 'ஆர்எக்ஸ் 100, கேங் லீடர், 90எம்எல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் 'சவ்வு கபுரு சல்லகா, கேஜி 7' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வில்லனாக நடிப்பதற்கு யார் யாரெல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துள்ளார். “வில்லனாக நடிக்க முக்கியத்துவம் இருந்தால் அம்மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லனாக நடிக்கிறேன். 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி, 'நான் ஈ' படத்தில் சுதீப் ஆகியோரை எனது வில்லன் நடிப்புக்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டுள்ளேன்,” எனக் கூறியுள்ளார்.
'வலிமை' படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.