டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். லாக்டவுனுக்கு பிறகு வெளியான முதல் மெகா படம் என்பதோடு, இப்படம் வெற்றிப்படமாகவும் அமைந்தது. அதோடு திரையரங்குகளில் வெளியாகி 16ஆவது நாளில் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோதும் தியேட்டர் வசூல் குறையவில்லை.
இந்தநிலையில், மார்ச் 4-ந்தேதியான இன்றோடு மாஸ்டர் படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிறது. அதனால் 50ஆவது நாளை கொண்டாடும் விதமாக மாஸ்டர் படத்தில் விஜய்-விஜயசேதுபதி ஆகிய இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தபோது எடுத்த சில வீடியோக்களை இணைத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அதோடு, திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் என்ற தியேட்டரில் மாஸ்டர் 50ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 200 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாஸ்டர் படத்தை பார்க்க இலவச டிக்கெட் வழங்கி இருப்பதாக அந்த தியேட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.