அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் |
சினிமா நடிகர் என்பதை தாண்டி பன்முகம் கொண்டவர் அஜித். கார் பந்தைய வீரர், பைக் ரேசர், போட்டோகிராபி, சிறிய ரக டிரோன் தயாரிப்பு என ஆர்வம் கொண்டவர். அதோடு துப்பாக்கி சுடும் வீரரும் கூட. துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றிருக்கிறார். சொந்தமாக லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருக்கும் ஒரு சில தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர்.
இந்த நிலையில் சென்னை ரைபிள் கிளப்பில் தனது துப்பாக்கி பயிற்சியை மீண்டும் தொடங்கி உள்ளார் அஜித். ரைபிள் கிளப்புக்கு எந்த உதவியாளரும் இன்றி அஜித் வருவதும், அங்குள்ள ஒரு பெண்ணிடம் தனது வருகையை பதிவு செய்வதும், பின்பு பயிற்சியாளருடன் உரையாடுவதுமான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் அஜித் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் போன்ற தோற்றத்தில் இருப்பதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். விரைவில் வெளிநாட்டில் நடக்க இருக்கும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்காக இந்த பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக ரைபிள் கிளப் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.