தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் |

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். தளபதி 65 எனக் குறிப்பிடப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வரும் நிலையில், ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பூஜையை சென்னையில் நடத்திவிட்டு, படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகத் தெரிகிறது.
கொரோனா பிரச்சினை இன்னமும் முழுவதுமாக தீராத நிலையில், விஜய் படக்குழுவினர் ரஷ்யா சென்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.