தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் |
புதியவர் வி.விஜய் நடித்து, இயக்கி உள்ள படம் 'விஷமக்காரன்'. அனிகா விக்ரமன், சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்பட இசை வெளியீட்டில் பேசிய விஜய், ''சினிமா எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியது தான் இந்த விஷமக்காரன். இங்கு ஹீரோவாக இருந்தால் தான் தியேட்டர் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதை கூட முக்கியமில்லை. ஹீரோ தான் முக்கியம். ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்பேன். படம் தியேட்டரில் வெளியாகிறது'' என்றார்.