இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அந்தப் படத்தில் அவரைப் பார்த்த ஞாபகம் எத்தனை பேருக்கு இருக்குமோ தெரியாது. ஆனால், 'மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக அவர் தான் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.
'மாஸ்டர்' படத்தில் விஜய், விஜய் சேதுபதி இருவரின் நடிப்புக்கு முன்னால் காணாமல் போய்விட்டார் மாளவிகா மோகனன். அவருடைய நடிப்பைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. பல காட்சிகளில் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்ற நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம்.
அதிலும் 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளிவந்த பிறகு அதிலிருந்து மாளவிகாவின் காட்சிகளை ஸ்கிரீன்ஷாட் அடித்து பல மீம்ஸ்கள் வெளிவர ஆரம்பித்தன. அவற்றை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. அவரைக் கலாய்க்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு உண்மையாகவே அப்பாவியாக இருக்கிறார் போலிருக்கிறது.
தன்னைப் பற்றி வெளிவந்த சில மீம்ஸ்களை அவரே பகிர்ந்து, “என்னைப் பற்றிய சொந்த மீம்ஸ்களுக்கு நான் கொஞ்சம் லேட்தான். ஆனால், இவை எல்லாம் மிகவும் காமெடியாக உள்ளன நண்பர்களே. மகிழ்ச்சியாகவே அதில் சிலவற்றைப் பகிர்கிறேன். இதில் டூத்பேஸ்ட் பற்றிய மீம்ஸுக்கு சிரித்துத் தள்ளிவிட்டேன். உங்களைப் பார்த்து நீங்களே சிரிக்காவிட்டால் வாழ்க்கை மிகவும் போரடித்துவிடும், இல்லையா,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.