தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் |
இயக்குனர் ஹரி முதன்முறையாக தனது மைத்துனரான அருண் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் நடிகை ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் ஹரி இயக்கிய பூஜை படத்தில் நடித்திருந்த ராதிகா மீண்டும் அவரது கூட்டணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.