முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படம் கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம். ஆனால், கொரானோ தொற்று காரணமாக தள்ளிப் போய்விட்டது.
இந்நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு வெளிவந்த பெரிய படமான 'மாஸ்டர்' படம் நல்ல வசூலைக் கொடுத்தது. அதனால், பலரும் தியேட்டர்களிலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்திருந்தார்கள்.
'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் தனுஷ். “விஜய் சாரின் மாஸ்டர் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது. சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி. நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் தியேட்டர்களில் படம் பார்ப்பதை இது மீண்டும் ஏற்படுத்தும். தியேட்டர்களில் படம் பார்ப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. தியேட்டர்களில் படம் பார்க்க அனைத்து முன்னெச்சரிக்கையையும் மேற்கொள்ளுங்கள்” என கடந்த மாதம் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இப்போது தனுஷ் தன்னுடைய படத்தையே ஓடிடி தளத்தில் வெளியிடுவது சரியா என்ற கேள்வி தியேட்டர் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் வெளியிடுவாரா என்று எதிர்பார்த்துள்ளார்கள்.