சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் டான். இந்தப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். இவர் அட்லீயிடம் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்தப்படத்தில் இசையமைப்பதன் மூலம் அனிருத்தும் சிவகார்த்திகேயனும் ஏழாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தின் கதைக்களம் கல்லூரி பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். டான் என வைக்கப்பட்டிருக்கும் தலைப்பிற்கேற்ப இந்தப்படத்தில் பொறியியல் கல்லூரி மாணவராக, மாணவர் தலைவனாக, ஒரு புரட்சியாளன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். அதேசமயம் அவரது வழக்கமான காமெடி விஷயங்கள் எதற்கும் படத்தில் குறைவு இருக்காது என்கின்றனர்.