அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் |
37 வருடங்கள் அனுபவம் வாய்ந்த நடிகர் ரகுமான். மம்முட்டியும், மோகன்லாலும் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் இளம் ஹீரோவாக அறிமுகமாகி அவர்களுக்கு போட்டியாக நடித்து வெற்றி பெற்றவர். இன்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் குணசித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
இதுதவிர மலையாள இயக்குநர் சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் உருவாகும் சமரா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று குலுமணாலியில் துவக்கப்பட்டது. தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலுமே நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகுமான் மீண்டும் ஹீரோவாக நடிப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது. இரண்டுமே வெவ்வெறு கதை களங்களை கொண்டதாகும். மலையாள படம் சமரா த்ரில்லர் வகை படம்.
இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், ஜெயம் ரவி நடிக்கும் படமான ஜன கன மன , விஷாலுடன் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.