குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் | பிளாஷ்பேக் : 'சலங்கை ஒலி' ஆன அனு பல்லவி | பிளாஷ்பேக்: சுதந்திரத்திற்கு முன்பே அதை கொண்டாடிய படம் |
ஆந்திராவில் ஐதராபாத் போலீஸில் ஒரு சிறப்பு பிரிவாக, கடந்த ஒரு வருடமாக மகளிர் போலீஸ் குழு ஒன்று இயங்கி வருகிறது.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து என தெரிய வந்தால், அடுத்த சில நிமிடங்களில் விரைந்து சென்று அவர்களை பாதுகாக்கும் பணியை செய்து வருகின்றனர் இந்த சிறப்பு குழுவில் உள்ள பெண் காவலர்கள். குறிப்பாக இவர்கள் மருத்துவ பயிற்சியும் பெற்றுள்ளனர். அந்தவகையில் கடந்த ஒரு வருடத்தில் பல பெண்களை, பல்வேறு விதமான உயிராபத்து பிரச்சனைகளில் இருந்து இவர்கள் மீட்டுள்ளனர்,
இந்த சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி, இதில் பணியாற்றும் பெண் காவலர்களை கவுரப்படுத்தும் விதமாக நேற்று போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் காவலர்களை பாராட்டி கவுரவித்தார் நடிகை அனுஷ்கா. இந்த வருடத்தில் அனுஷ்கா கலந்து கொள்ளும் முதல் நிகழ்வும் இதுதான்.. .
இதுபற்றி அனுஷ்கா கூறும்போது, “சினிமா நடிகர்களான நாங்கள் நட்சத்திரங்களாக உருவகப்படுத்தப்படுகிறோம்.. ஆனால் காவல்துறையில் உள்ள ஒவ்வொருவருமே நிஜமான நட்சத்திரங்கள் தான். உங்கள் முயற்சி, கடின உழைப்பு மற்றும் தியாகத்தால் தான், நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம்.. இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதையும் நிஜ நட்சத்திரங்களை சந்தித்தததையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன்” என கூறியுள்ளார்.