ரெட்ரோ முதல் நாள் வசூல் முழு விவரம் | தங்களது படங்களை லண்டனில் பார்த்த சிம்ரன், பூஜா ஹெக்டே | 'ரெட்ரோ' படத்தில் இடம் பெற்ற 'செனோரீட்டா'.... இளையராஜாவின் பாடல் | நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன் | கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கி வருகிறார். கோட்டா நீலிமா எழுதிய ஷூஸ் ஆப் தி டெட் நாவலை படமாக்க இருக்கிறார் வெற்றி மாறன். சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படமும், சூரி நடிக்கும் படமும் நாவலை அடிப்படையாக கொண்டதே. கட்டில் என்ற நாவலும் படமாகி உள்ளது.
இந்த நிலையில் மற்றுமொரு நாவல் படமாகிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக அமைதிப்படை 2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தயாரித்து வருகிறார்.
கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதி வருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய 'முற்றாத இரவொன்றில்' என்கிற நாவலை தழுவி படம் ஒன்றை இயக்கி தயாரிக்க இருக்கிறார் சுரேஷ் காமாட்சி. இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி.