ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் 13ம் தேதி வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கான உண்மையான வரவேற்பு இன்று(ஜன., 18) முதல் தான் தெரியும். சுமார் பத்து மாதங்களாக தியேட்டர்கள் பக்கமே போகாத மக்களும், விஜய் படம் என்பதால் 'மாஸ்டர்' படத்தைத் தியேட்டர்களில் சென்று பார்த்தனர். பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதாலும் படத்திற்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாகவே கிடைத்தது.
50 சதவீத இருக்கைகளில் இப்படம் வசூலித்த தொகை யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். அது உலக அளவிலும் எதிதொலித்துள்ளது. ஜனவரி 15 முதல் 17 முடிய கடந்த வார இறுதி நாட்களில் 'மாஸ்டர்' உலக அளவில் 23 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரு மடங்கு வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் 'எ லிட்டில் ரெட் பிளவர்' படம் 11.75 மில்லியன் யுஎஸ் டாலரை மட்டுமே வசூலித்துள்ளது.
தியேட்டர்கள் திறக்கப்பட்ட பல வெளிநாடுகளிலும் 'மாஸ்டர்' படத்தைப் பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு விமர்சனங்களுக்கிடையில் இப்படம் தென்னிந்திய அளவிலும், உலக அளவிலும் லாபத்தைப் பெற்றுவிடும் என்கிறார்கள். ஹிந்தியில் மட்டுமே இப்படம் கடந்த வாரத்தில் வெறும் 2 கோடியை மட்டுமே வசூலித்து தோல்வியைக் கண்டுள்ளது.