விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேசுக்கு வெற்றியை கொடுக்குமா ‛ரெளடி ஜனார்தனா' | அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம் | சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி | தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி அறிவிப்பு | 2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள் | நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் |

1988ம் ஆண்டு வெளிவந்த படம் 'மக்கள் ஆணையிட்டால்'. இந்த படத்தை ராம நாராயணன் இயக்கி, தயாரித்தார். விஜயகாந்த், ரேகா, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். ஊழல் அரசியல்வாதியை எதிர்த்து இரண்டு இளைஞர்கள் போராடுவதுதான் படத்தின் கதை.
இந்த படத்தின் பாடல்களை இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரே எழுதியிருந்தார். 'ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாருங்க' என்ற பாடலை மட்டும் கருணாநிதி எழுதியிருந்தார். இந்த பாடலுக்கு ஸ்டாலின், அவராகவே நடித்திருந்தார். திமுக இளைஞரணி தொண்டர்களோடு அவர் உற்சாக நடைபோட்டு பாடுவதாக பாடல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் இப்போதும் தேர்தல் பிரசார பாடலாக திமுகவினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.