டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளிவந்தது. ஒரு விருது விழாவிலும் அது பற்றி கமல்ஹாசன் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் அது குறித்து பேசுகையில், “அடுத்து ரெட்ஜெயன்ட், ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டு நிறுவனத்துக்கும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போறேன். இன்னும் டைரக்டர் முடிவாகல. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. கரெக்டான கதை, கதாபாத்திரம் கிடைக்கணும். கிடைச்சா ஆக்ட் பண்ணுவேன்,” என்றார்.
ஆக, லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை இயக்குவார் என்று வந்த செய்திகள் பொய் என்பது ரஜினியின் பேச்சு மூலம் உறுதியாகி உள்ளது. சரியான கதை, கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிப்பார்கள் எனத் தெரிகிறது.