வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
தமிழ், தெலுங்கில் ஒரே ஆண்டில் ஆரம்பமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. தமிழில் முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கடந்த வருடம் ஒளிபரப்பான 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி, அதை இந்த வருடம் 9வது சீசனிலும் தொடர்கிறார். விரைவில் தமிழில் 9வது சீசன் ஆரம்பமாக உள்ளது.
இதனிடையே, தெலுங்கில் 9வது சீசன் நேற்று முதல் ஆரம்பமானது. 3வது சீசனிலிருந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜுனா 9வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நேற்று ஆரம்பமான 9வது சீசனில் 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். '7 ஜி ரெயின்போ காலனி' படத்தில் நடித்த தெலுங்கு நகைச்சுவை நடிகைர் சுமன் ஷெட்டி, நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி சஞ்சனா கல்ரானி அந்த 15 போட்டியாளர்களில் தமிழ் ரசிகர்களுக்குக் கொஞ்சம் அறிமுகமானவர்கள்.
அடுத்த 107 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முந்தைய சீசன்களைப் போல இந்த சீசனும் பேசப்படுமா என்பது போகப் போகத் தெரியும்.