பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவில் இரண்டு முக்கியமான ரிலீஸ் நாட்களாக பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை நாட்கள் அமையும். அந்த விதத்தில் இந்த வருட தீபாவளிக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நட்சத்திரங்கள் படம் எதுவும் வரவில்லை என்றாலும் வளரும் நட்சத்திரங்களின் படங்கள் அந்த போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'பைசன்', சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடித்துள்ள 'டீசல்', விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்துள்ள 'டுயூட்', ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' ஆகிய படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்களான 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' மற்றும் 'டுயூட்' ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படம்தான் அன்றைய தினத்தில் வெளியாகும். மற்றொன்று தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஆனாலும், அது பேச்சு வார்த்தைக்குப் பிறகே முடிவாகும். இந்த 5 படங்களுடன் தீபாவளி வெளியீடு நிற்குமா அல்லது மேலும் சில படங்கள் போட்டியில் சேருமா என்பது போகப் போகத் தெரியும்.
ஒவ்வொரு படமும் வெளியீட்டிற்கு முன்பாக ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை என்றாலும் இந்தப் படங்களுடன் இந்த வருட தீபாவளி கொண்டாட்டம் சினிமாவில் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.