'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புது கட்டடம் கட்ட 2016ல் பணிகள் தொடங்கின. ஆனால், சங்க தேர்தல், சட்ட பிரச்னைகள், கொரோனா காரணமாக பணிகள் தொய்வடைந்தன. தவிர, 25 கோடி செலவில் கட்டடம் கட்ட பிளான் போடப்பட்டது. இப்போது அந்த செலவு 3 மடங்காகி உள்ளது. இப்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஆகஸ்ட் 15ல் நடிகர் சங்க புது கட்டடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
இந்நிலையில் இன்று விஜயகாந்த் 73 பிறந்தநாள் என்பதால் பலரும் நடிகர் சங்க கட்டடம், சங்கத்தை கடனில் இருந்து மீட்க அவர் நடத்திய போராட்டங்கள், வெளிநாடுகளில் நடத்திய கலை நிகழ்ச்சிகளை பற்றி பேசுகிறார்கள். புது நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து நடிகர் சங்க சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷாலும் பேட்டி கொடுத்து இருக்கிறார். ஆகவே, அதில் பிரச்னை வராது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிலர் நடிகர் சங்க இடத்தை வாங்க உதவிய எம்ஜிஆர், என்எஸ் கிருஷ்ணன் பெயரை, சங்கத்தின் சில பகுதிகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போது பணிகள் விரைந்து நடக்க, நிதி உதவி, சட்டரீதியிலான உதவிளை செய்து வருபவர் துணை முதல்வர் உதயநிதி. அவர் மனசு குளிரும் வகையில் கருணாநிதி பெயரையும் எப்படியாவது, எங்கேயாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே, விஜயகாந்த், எம்ஜிஆர், கருணாநிதி பெயர்கள் நடிகர் சங்க கல்வெட்டில் இருக்கும். முகப்பில் விஜயகாந்த் பெயரில் சங்க கட்டடம் அமைய வாய்ப்பு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.