'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
2025 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா', ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'அடங்காதே' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 27ம் தேதியும், அதர்வா நடித்துள்ள 'தணல்' படம் ஆகஸ்ட் 29ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படங்கள் வருமா, வராதா என்பது பற்றி எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. கடந்த சில நாட்களாக எந்த விளம்பரங்களும் வரவில்லை என்பதால் நிச்சயம் இந்தப் படங்கள் வெளிவராது.
அதேசமயம், ஆகஸ்ட் 27ல் கடுக்கா என்ற படம் மட்டும் வெளியாகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி சில சிறிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “அசுர மனிதன், கிப்ட், குற்றம் புதிது, நறுவீ, சொட்ட சொட்ட நனையுது, வீர வணக்கம், பேய்கதை ' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு மலையாளம், தமிழில் தயாராகி உள்ளதாக சொல்லப்படும் 'பல்டி' படமும் அதே நாளில் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த வருடம் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐக் கடக்கிறது. இந்த வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் எப்படியும் 75 படங்களாவது வெளியாக வாய்ப்புள்ளது.