‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

உலக அளவில் அதிகமான வசூலைப் பெற்றுத் தரும் திரையுலகத்தில் இந்தியத் திரையுலகமும் ஒன்று. இந்த 2025ம் வருடத்தில் இதுவரையில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்கள் மூலம் மட்டும் சுமார் 4000 கோடி வரை வசூலித்துள்ளது. மற்ற படங்களின் வசூலையும் சேர்த்தால் சுமார் 7000 கோடியைக் கடந்துள்ளது.
அதில் கடந்த மாதம் வெளியான படங்கள் மூலம் மட்டும் சுமார் 1400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கடந்த மாதம் வெளியான ஹிந்திப் படமான 'சாயரா', அனிமேஷன் படமான 'மகாஅவதார் நரசிம்மா', தெலுங்குப் படமான 'ஹரிஹர வீரமல்லு', தமிழ்ப் படமான 'தலைவன் தலைவி', கன்னடப் படமான 'சு பிரம் சோ' ஆகிய படங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டியவை.
அவற்றோடு ஹாலிவுட் படங்களான 'ஜூராசிக் வேர்ல்டு ரிபர்த், சூப்பர்மேன், தி பன்டாஸ்டிக் போர் - தி பர்ஸ்ட் ஸ்டெப்ஸ், எப் 1 ஆகிய படங்களும் இந்தியாவில் நல்ல வசூலைக் கொடுத்துள்ளன.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் கடந்த ஜுலை மாதத்தில் வெளியான 24 படங்களில் 'தலைவன் தலைவி' படம் மட்டும் 80 கோடி வசூலைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது. '3 பிஎச்கே, பறந்து போ, மாரீசன்' ஆகிய படங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றாலும் குறைந்த அளவிலான வசூலை மட்டுமே கொடுத்தன.