பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

2023ம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. விருதுகளை வென்றவர்களுக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை 'பார்க்கிங்' திரைப்படம் வென்றிருக்கிறது.
'பார்க்கிங்' திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.
வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வாழ்த்துச் செய்தியில், “ஜவான்' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துகள். உலக சினிமாவில் உங்கள் அற்புதமான தாக்கத்திற்கு இந்த அங்கீகாரம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது.
'12th Fail' ஒரு மாஸ்டர்பீஸ், அது என்னை ஆழமாக நெகிழச் செய்தது. இது போராட்டத்தை கவுரவப்படுத்தி மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியது. விது வினோத் சோப்ரா மற்றும் விக்ராந்த் மாஸேக்கு இந்த பொருத்தமான கவுரவத்திற்கு வாழ்த்துக்கள். ராணி முகர்ஜிக்கு ஒரு உக்கிரமான மற்றும் உணர்ச்சிமிக்க நடிப்பிற்காக இந்த தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான பாராட்டுக்கள்,” பாலிவுட் கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.