இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்த வருடத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பின் துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தது.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 'ஹரிஹர வீர மல்லு', 'ஓஜி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக 'உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு கதாநாயகியாக ராஷி கண்ணா இணைந்து நடித்து வருகிறார் என படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.