நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் மகள் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கடந்த சில வருடங்களாகவே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தற்போது மலையாளத்தில் முதல் பெண் சூப்பர் மேன் கதை அம்சம் கொண்ட படமாக யோகா ; சாப்டர் ஒன்னு சந்திரா என்கிற படம் தயாராகி வருகிறது. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக மார்ஷல் என்கிற படத்திலும் நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
சமீபத்தில் இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இரண்டு குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதுமே எனது நண்பனாக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார், பலரும் இந்த புகைப்படத்திற்கும் ஜாக்கி ஷெராவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி வந்த நிலையில், தற்போது அது குறித்த சஸ்பென்சை உடைத்துள்ளார் கல்யாணி.
இது குறித்து அவர் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று நான் வெளியிட்ட புகைப்படத்தில் ஜாக்கி ஷெராப்புடன் இருக்கும் சிறுவன் தான் என்னுடைய நண்பன் பிரணவ் மோகன்லால். அந்த படத்தில் இருக்கும் அந்த மொட்டை வேறு யாரும் அல்ல,, அது நான் தான்” என்று கூறியுள்ளார்.