ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய அட்லி, அதையடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ ரோஸ் உள்ளிட்ட ஐந்து பேர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அட்லி. இந்த வில் ஸ்மித் ஹாலிவுட்டில் பேட் பாய், மென் இன் பிளாக் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர். ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜுனுடன் மோதும் வில்லனாக வில் ஸ்மித் நடிக்கப் போவதாக வெளியாகி இருக்கும் செய்தி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.