ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, பின்னர் அரசியலுக்கு வந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ளார். கடந்த முறை ஆந்திராவில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது ரோஜா அமைச்சராக இருந்தார். இந்நிலையில் ஆந்திராவில் துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன் கல்யாணை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சிலர் டைம்பாசுக்கு அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நாள் படப்பிடிப்பு, அடுத்த நாள் ஆன்மிக பயணம் என்று பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு நடிகர்கள் வருவதை நான் எதிர்க்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நல்ல எண்ணத்துடன் வர வேண்டும். நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி அதன் பிறகு காங்கிரஸில் இணைந்து விட்டார். இதனால் அவரை நம்பி வந்த கட்சி நிர்வாகிகளெல்லாம் ரோட்டில் நின்றார்கள். அதனால் நடிகர் விஜய், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தன்னை நம்பி வரும் தொண்டர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பைட் பண்ண வேண்டும். கட்சியை இடையில் விட்டு விட்டு ஓடி விடக்கூடாது. தொண்டர்களை ரோட்டில் விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார் நடிகை ரோஜா.