லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது வார் 2. கடந்த 2019ல் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக இந்த வார் 2 தயாராகியுள்ளது. முதல் பாகத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கிய நிலையில், இந்த இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி இயக்கி வருகிறார். இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, வில்லனாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராணுவ பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுக்கு விடை கொடுக்கும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது குறித்த தகவலை புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஹிருத்திக் ரோஷன் கூறும்போது, “149 நாட்கள்.. சேசிங், ஆக்ஷன், டான்ஸ், ரத்தம், ஸ்வீட், காயங்கள்.. ஆனால் இவை அனைத்துமே ரொம்பவே ஒர்த் ஆனவை. ஜூனியர் என்டிஆர் சார் இந்த படத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகப் பெருமையான விஷயம். கியாரா அத்வானியின் இன்னொரு கொடிய பக்கத்தை உலகம் பார்க்கப் போகிறது” என்று கூறியுள்ளார்.