இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெறுகின்றன. அந்த எழுத்தாளர் வீடு தேடி வருகின்றன. ''எங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றுங்கள், எங்கள் கேரக்டரை இப்படி மாற்றியது ஏன்'' என்று சண்டைபோடுகின்றன. ''அது என் கற்பனை, என் இஷ்டபடிதான் எழுதுவேன்'' என எழுத்தாளர் சொல்ல, அந்த கேரக்டர்களால் எழுத்தாளருக்கு பிரச்னைகள் வருகிறது. அந்த கற்பனை கதை கேரக்டர்கள், எழுத்தாளரை துரத்துகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பது மாயக்கூத்து கதை.
இந்த படத்தில் மறைந்த நடிகர் டில்லிகணேஷ் பத்திரிகை எடிட்டர், பப்ளிஷர் ஆக வருகிறார். இது குறித்து இயக்குனர் கூறுகையில் ''நாங்கள் சின்ன டீம். 25 லட்சத்தில் இந்த படத்தை எடுத்தோம். டில்லி கணேசிடம் தயங்கியபடி பேசினோம். அவரோ, சம்பளத்தை மிக குறைவாக வாங்கிக்கொண்டு எங்களுக்காக நடித்து கொடுத்தார். அவரின் நடிப்பு, டெடிகேசன் பார்த்து மிரண்டு விட்டோம். அதேபோல், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த நாடக ஆசிரியர், எழுத்தாளரான மு.ராமசாமியும் கவுரவ வேடத்தில், எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துக்கொடுத்தார்.
என் அப்பா மலையாளத்தில் 20 படங்களை இயக்கியவர். அவர் படம் தயாரித்ததால் ஒரு கட்டத்தில் கடனாளி ஆனோம். நான் வேலைக்கு போய் கடனை அடைத்து, அப்பா பாணியில் படம் இயக்கியுள்ளேன். இந்த பட திரைக்கதையும், எடிட்டிங்கும் பலரை கவர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒரு முழு படம், இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி சாத்தியம் என பலரும் கேட்கிறார்கள்'' என்றார்.