இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி'. இதில் அமீர் கான், நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே இந்த படத்தின் பிஸ்னஸ் பணி முடிவடைந்து அது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமையை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனம் கைப்பற்றியதாக சமீபத்தில் அறிவித்தனர். கூலி படத்தின் வெளிநாட்டு உரிமையை அந்நிறுவனம் ரூ. 86 கோடிக்கு கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், இந்நிறுவனத்திடம் இருந்து கூலி படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமையை பிரத்யாங்கரா சினிமாஸ் நிறுவனம் ரூ. 30 கோடிக்கு கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான தமிழ் படங்களில் இப்படம் தான் அதிக விலைக்கு வியாபாரம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.