இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
அனுஷ்கா நடிப்பில் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற படம் திரைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது கிரிஷ் இயக்கியுள்ள ‛காட்டி' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் முதலில் ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஜூலை 11ம் தேதி காட்டி படம் திரைக்கு வருவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தின் சிஜி பணிகள் இன்னும் முடிவடைய வில்லையாம். அதன் காரணமாகவே இப்படத்தை தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இன்னும் படத்திற்கான விளம்பரங்களை தொடங்கவில்லையாம். அதனால் காட்டி படம் ஜூலை 11 ரிலீஸில் இருந்து தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் விக்ரம் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.