நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா |
தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், அவர் கைவசம், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வா வாத்தியார், ஜீனி' படங்கள் உள்ளன.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கிர்த்தி ஷெட்டி பேசுகையில், ''கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் தன்னை நெகிழ வைத்தன. நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என நம்புகிறேன்'' எனப் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.