கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ் கலாசாரத்தில் அண்ணி உறவிற்கு தனி மவுசு உண்டு. அண்ணன் மனைவி என்றாலும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணி, இன்னொரு அன்னை என்பார்கள். 1950களுக்கு முன்பு வந்த சமூக திரைப்படங்களில் அண்ணி உறவு அவ்வப்போது சில காட்சிகளாக வந்து சென்றிருக்கிறது. புராண படங்களில் சீதை, லட்சுமணனுக்கு அண்ணி என்பதால் அதுகுறித்த காட்சிகள் நிறைய வந்திருக்கிறது.
அண்ணி என்ற உறவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவான முதல் படம் 'அண்ணி'. தன் கணவரின் கடைசி தம்பியை, பெற்ற மகன் போல் பாதுகாத்து வளர்க்கும் ஒரு அண்ணி சந்திக்கும் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்தான் கதை. அண்ணியாக ஜி.வரலட்சுமி நடித்தார், தம்பி என்கிற சிறுவனாக மாஸ்டர் சேது நடித்தார். இவர்கள் தவிர காந்தாராவ், சுந்தராவ், அன்னபூர்ணா கமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கே.எஸ்.பிரகாஷ் ராவ் தயாரித்து, இயக்கினார், பெண்டியாலா இசை அமைத்திருந்தார். தெலுங்கு கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படம் தமிழிலும் தயாரானது. ஆனால் தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னாளில் இதே பெயரில் தமிழில் பல படங்கள் வந்தது, 'அண்ணி' என்கிற தொலைக்காட்சி தொடரும் மிகவும் பிரபலமானது.