மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! |
பாலிவுட்டில் பிரபலமான மூத்த நடிகை நீனா குப்தா. நடிப்பு, இயக்கம் என பன்முக திறமை கொண்ட நடிகை. இவர் நடித்த ‛பஞ்சாயத்து' வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ஏற்கனவே மூன்று சீரிஸ்கள் வெளியான நிலையில் இப்போது நான்காவது சீசன் வெளியாக உள்ளது. மஞ்சு தேவி வேடத்தில் நடித்துள்ள அவரின் இந்த தொடர் வரும் ஜூன் 24ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நீனா குப்தா அளித்த பேட்டி...
இந்த முறை உங்கள் கதாபாத்திரத்தில் என்ன புதுமைகள் இருக்கும்?
ஆமாம் ஒவ்வொரு முறையும் இந்த தொடரின் எழுத்தாளர்கள் எங்கள் கதாபாத்திரத்திற்கு எதையாவது புதிதாகவோ அல்லது வித்தியாசமாகவோ எழுதுகிறார்கள். நாங்கள் அதை செய்கிறோம். இந்த முறை பார்வையாளர்களுக்கு நிறைய வேடிக்கை காத்திருக்கிறது என்று உறுதியாக சொல்வேன். ஏனெனில் படப்பிடிப்பு தளத்திலேயே நாங்கள் சிரித்துக் கொண்டே இருந்தோம். அப்படியென்றால் பார்வையாளர்களுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என நினைத்து பாருங்கள். படப்பிடிப்பு தளத்தில் பல சமயங்களில் நாங்கள் அதிகமாக சிரிக்க, இயக்குனர் வந்து எங்களை கட்டுப்படுத்தினார்.
மஞ்சு தேவி கதாபாத்திரத்தை ஏற்கும்போது ஏதேனும் சிரமங்களை எதிர்கொள்கிறீர்களா?
இந்தத் தொடரில் எனது கதாபாத்திரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தொடரின் சூழ்நிலைகளும், கதையும் மட்டுமே மாறுகின்றன. இந்த தொடரை ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருட இடைவெளியில் படமாக்குகிறேன். அதனால், ஒவ்வொரு முறையும் எனது கதாபாத்திரத்தின் உரையாடல் தொனியை மீண்டும் பழகுவதில் சற்று சிரமம் இருக்கிறது. அதைத் தவிர, இந்த கதாபாத்திரத்தை நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
பஞ்சாயத்து வெப் தொடர் உங்கள் சினிமா பயணத்தில் எவ்வளவு பங்களித்திருக்கிறது?
பஞ்சாயத்து தொடர் எனது சினிமா வாழ்க்கைக்கு மிகவும் பங்களித்திருக்கிறது. நான் பல படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் இந்தியா முழுவதும் என்னை அறிந்திருப்பது பஞ்சாயத்து தொடர் மூலமாக மட்டுமே என்று சொல்லலாம். நான் எங்கு போனாலும் அது கிராமமாக இருந்தாலும் சரி, பெரிய பார்ட்டிக்கு போனாலும் சரி, எல்லோரும் என்னிடம், "நீங்கள் பஞ்சாயத்தில் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள்" என்று சொல்கிறார்கள். அது மகழ்ச்சி அளிக்கிறது.
எதிர்காலத்தில் இயக்குநராக வேலை செய்யும் எண்ணம் உள்ளதா?
எனது நடிப்பு வாழ்க்கை நன்றாக போகிறது. இதை நான் ரசித்து வருகிறேன். முடிந்த அளவு இதிலேயே வேலை செய்ய விரும்புகிறேன். மக்கள் என்னிடம் நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்த்து வருகிறார்கள். எனவே இயக்கம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை.
இவ்வாறு நீனா குப்தா தெரிவித்தார்.