ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமா ஒரு 'ஹிட்' படத்தைப் பார்த்து 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அடுத்த ஒரு 'ஹிட்' எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து சில முக்கிய படங்களும், முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளது. அவற்றில் எது வரவேற்பைப் பெறும் என்பதை படம் வரும் வரையில் யாராலும் யூகிக்க முடியாது என்ற நிலைதான் தற்போது உள்ளது.
இந்த வாரம் ஜுன் 20ம் தேதி தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மாந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'குபேரா' படம் வருகிறது. 'வாத்தி' படத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்துள்ள படமாக இப்படம் அமைந்துள்ளது. 'வாத்தி' போல தெலுங்குப் பின்னணியுடன், கதைக்களம் என அனைத்துமே தெலுங்கு வாடையுடன் இந்தப் படத்தில் இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது. படப்பிடிப்பு தமிழகத்தில் நடந்ததாக தகவல் எதுவும் இல்லை. அதுதான் இந்தப் படம் மீதான சந்தேகமாக உள்ளது.
அதர்வா, நிமிஷா விஜயன் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரசன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க ஜிப்ரான் பின்னணி இசையமைக்க உருவாகியுள்ள படம் 'டிஎன்ஏ'. கடந்த சில வருடங்களாகவே தமிழில் வெற்றியைப் பதிக்கத் தடுமாறிக் கொண்டிருக்கும் அதர்வா இந்தப் படம் மீது அதிக நம்பிக்கையுடன் உள்ளார். 2019ல் 'மான்ஸ்டர்' வெற்றிப் படத்தைத் தந்த நெல்சன் இயக்கத்தில் 2023ல் வெளிவந்த 'பர்ஹானா' சரியாகப் போகவில்லை. இருவருக்குமே இந்தப் படத்தின் வெற்றி மிக அவசியம்.
விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், ராஜேந்திரன், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே நகைச்சுவைப் படங்களுக்கு கடும் பஞ்சம். காமெடிப் படம் என்று சொல்லிக் கொண்டு வரும் படங்களும் சிரிக்க வைப்பதில்லை. இந்தப் படத்தில் இன்றைய சில நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளார்கள். காமெடிக்காக ஏங்கியிருக்கும் ரசிகர்களை இவர்கள் சிரிக்க வைப்பார்களா அல்லது 'கேங்கர்ஸ்' போல இந்த 'கேங்ஸ்டர்ஸ்' ஏமாற்றுவார்களா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.