ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக போகிறார். ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடித்த ‛புஷ்பா-2' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழக ரசிகர்களுக்கு பரீட்சயமாகிவிட்ட ஸ்ரீ லீலா, பராசக்தி படத்தில் 1960 காலகட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் ஜூன் 14ம் தேதியான நேற்று ஸ்ரீலீலா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. அந்த வீடியோவில், சிவாஜி, சரோஜாதேவி நடித்த ‛பார்த்தால் பசி தீரும்' படத்தில் இடம்பெற்ற கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா குழந்தைத்தனமாக நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.