ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
விஜய் நடிக்கும் கடைசி படம் ‛ஜனநாயகன்' என்று சொல்லப்படுகிறது. அவர் தீவிர அரசியலில் இறங்குவதால் இனி நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டார். ஜனநாயகன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இப்போது பலரும் கேட்கிற கேள்வி ஜனநாயகன் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நடக்குமா? அதில் விஜய் பேசுவாரா? குட்டிக்கதை சொல்வாரா? சினிமாவை விட்டு விலகப்போகும் நிலையில், தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்வாரா? தன்னை வளர்த்தவர்களுக்கு நன்றி சொல்வாரா? என்பதே.
இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தால் ஜனநாயகன் பட பாடல் வெளியீட்டுவிழாவை பிரம்மாண்டமாக நடத்தி விஜயை சந்தோஷமாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்பதே படக்குழுவினரின் ஆசை. இசையசைப்பாளர் அனிருத்தும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தயாராக இருக்கிறார். ஆனால், அதனால் பிரச்னைகள் வருமோ, பட ரிலீசுக்கு பாதிப்பு வருமோ என விஜய் யோசிக்கிறார். ஆனாலும், விஜயை சம்மதிக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.