ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மறைந்த விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் 80களில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். கிராமப்புறங்களில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் இருக்கிறதோ இல்லையோ விஜயகாந்த் ரசிகர் மன்றம் கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை அந்தக் காலத்தில் இருந்தது.
வழக்கம் போல அவரது வாரிசும் சினிமாவில் நடிக்க வந்தார். அவரது இரண்டாவது மகனான சண்முகப்பாண்டியன் 2015ல் வெளிவந்த 'சகாப்தம்' படம் மூலம் கதாநாகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 'மதுர வீரன்' படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாகப் பேசப்படவில்லை. மூன்றாவது படமாக அவர் நடித்துள்ள 'படை தலைவன்' படம் நாளை வெளியாக உள்ளது.
இந்தப் படத்திலும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகத்தான் நடித்துள்ளார். விஜயகாந்த் ரசிகர்கள் வந்து பார்த்தாலே படம் வெற்றிப் படமாக அமைந்துவிடும். படம் நன்றாக இருந்தால் மற்ற ரசிகர்களும் வந்து படம் பார்ப்பார்கள். கடந்த பத்து வருடங்களில் மூன்றே படங்களில் நடித்துள்ள சண்முகப்பாண்டியன் இந்த 'படை தலைவன்' படம் மூலம் வெற்றியைப் பதிவு செய்வாரா என திரையுலகினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்தப் படத்துடன் நாளைய வெளியீடாக 'கட்ஸ், ஹோலோகாஸ்ட்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களும் வெளியாக உள்ளன.