பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர்கள் அடுத்த மொழி இயக்குனர்களுடன் அவ்வளவு சீக்கிரத்தில் கூட்டணி சேர மாட்டார்கள். மலையாள இயக்குனர்கள் சிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் தற்போதைய நிலை என்னவென்பது தெரியவில்லை.
இதனிடையே, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46வது படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது. தெலுங்கு இயக்குனர்களுடன் சூர்யா கூட்டணி வைக்கும் மூன்றாவது படம் இது.
இதற்கு முன்பு 2010ல் வெளிவந்த தெலுங்கு, ஹிந்திப் படமான 'ரத்த சரித்திரம்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார் சூர்யா. அதற்கடுத்து 2016ல் வெளிவந்த '24' படத்தில் தெலுங்கு இயக்குனரான விக்ரம் குமாருடன் கூட்டணி அமைத்தார். அதற்கடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் வெங்கி அட்லூரியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
தனுஷ் நடித்து வெளிவந்த 'வாத்தி' படம் இயக்குனர் வெங்கியை தமிழ் ரசிகர்களுக்கும் தெரிய வைத்தது. கடந்த வருடம் அவர் இயக்கத்தில் வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. வெங்கி - சூர்யா கூட்டணி அமைத்துள்ள சூர்யாவின் 46வது படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது.